தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் மூன்றாவது பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்வும் 31. 3. 2024 ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்லூரியின் ஸ்தாபகரும் பணிப்பாளருமாகிய கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல். முபாரக் மதனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வின் இரண்டாம் பகுதியில் அடுத்த மூன்று வருடத்திற்கான புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகத்தின் தலைவியாக கல்லூரியின் முதல் தொகுதி மாணவிகளில் ஒருவரான மௌலவியா அப்துல் ஹாதி தானியா ஹுதாயிய்யா, B.A , அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.