G.C.E சாதாரண தரப்பரீட்சை எழுதிய பெண் மாணவிகளுக்கான How to be an Ideal Islamic Woman எனும் கருப் பொருளிலான கருத்தரங்கு 2024-05-22ம் திகதி காலை 8.30 – 1.30 மணிவரை தாருல் ஹுதா அரபு இஸ்லாமியக கற்கைகள் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் பணிப்பாளர் Dr. ML. முபாறக் (மதனி) அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
இதில்
இஸ்லாம் பற்றிய அடிப்படை விளக்கங்கள்
ஆளுமை விருத்திக்கான வழிகாட்டல்கள்
ஆண்மிகப் பருவத்தை அதிகரிப்பதற்கான உரைகள்
பெண்களுக்கான ஒழுக்கவியல் வழிகாட்டல்கள்
போன்ற அடிப்படை அம்சங்கள் பல்வேறு சிரேஷ்ட உலமாக்களினால் வழங்கப்பட்டது.
இதில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவிகள் இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்தும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சாண்றிதழ்களும் விஷேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.