அரபு மொழியின் ஆழமான செழுமையையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் நினைவுபடுத்தும் ஒரு மதிப்பு மிக்க நிகழ்வான சர்வதேச அரபு மொழிப்போட்டி தாருல் ஹ_தா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில், கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களின் வழிகாட்டலில் எதிர் வரும் (16-18.12.2024) ம் திகதிகளில் நடாத்தப்பட இருக்கிறது. கல்லூரியால் நடாத்தப்படும் இந்தப் போட்டியானது உலகின் மிகவும் செல்வாக்குமிக்க மொழிகளில் ஒன்றிற்கான ஆழ்ந்த பாராட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .
இந்த நிகழ்வில் அரபு மொழியின் சிறப்பையும் அழகையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறும். அனைத்து மட்டங்களிலும் உள்ள மாணவர்கள் பங்கேற்கவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், தனித்துவமான கலாச்சார அனுபவத்தினை பெற்றிடவும் மாணவிகள் உட்சாகமூட்டப்பட்டுள்ளனர்.
போட்டி நிகழ்சிகள் பற்றிய விபரங்கள் :
“அரபு மொழியின் சிறப்புகளை உலகறியச் செய்ய அனைவரும் ஒன்றிணைவோம்”