சர்வதேச அறபுமொழி தின சிறப்புநிகழ்ச்சி – 2024

டிசம்பர் 18 புதன்கிழமை சர்வதேச அறபுமொழி தினத்தை முன்னிட்டு எமது கல்லூரி சிறப்பு நிகழ்வொன்றை நடாத்தியது. இந்நிகழ்வானது மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களை ஒருங்கிணைத்து அறபு மொழியின் சிறப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் அமையப்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக எமது கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களால் Dr. PMM. IRFAN நளீமி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வளவாளராகவும் அழைக்கப்பட்டிருந்தார்.

மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது தாய்லாந்து பிரின்ஸ் ஆப் சொக்லாந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய அறிவியல் கற்கைகள் பீடத்தில் விரிவுரையாளராகவும். அறபு மொழி தரம்காண் பரீட்சைகள் மற்றும் ஆற்றல் விருத்தி நிலையத்தின் பிரதித்தலைவராகவும் கடமையாற்றுகின்றார்.

இந்நிகழ்வானது இரண்டு கட்டங்களாக இடம்பெற்றது. முதற்கட்ட நிகழ்வு காலை 10.30 தொடக்கம் மதியம் 12.00 மணி வரை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் Dr. PMM. IRFAN நளீமி அவர்களால் அறபு மொழியின் முக்கியத்துவம் , சர்வதேச மட்டத்தில் அதன் செல்வாக்கு, அறபு மொழியை ஆழமாகக் கற்பதின் அனுகூலங்கள் என்பன தொடர்பாக பல பயனுள்ள தகவல்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு அறபு மொழியை கற்பதற்கு ஆர்வமூட்டும் வகையில் இவரது உரை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்நிகழ்வின் இறுதியில் Dr. PMM. IRFAN நளீமி அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட சுமார் 12 பெறுமதியான புத்தகங்கள் கல்லூரியின் நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்ட நிகழ்வாக மதியம் 12.30 இலிருந்து 1.45 மணி வரை கல்லூரியின் Board room இல் Dr. PMM. IRFAN நளீமி அவர்களால் அறபு மொழியை சிறப்பாக கற்பிப்பதற்கான வழிகாட்டல்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இதன்போது கல்லூரியின் பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.