தாறுல்ஹுதா அறபு மற்றும் இலாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியில் சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் (18.12.2024) கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 12.01.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 11.00 மணி தொடக்கம் மதியம் 1.50 மணி வரை வெகு விமர்சையாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ் .
கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் கௌரவ Dr .ARM. ஹாரிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி Dr. ML. முபாறக் ( மதனி ), செயலாளர் M. பஹ்றுதீன் ஆசிரியர் , கல்லூரியின் உதவிப்பணிப்பாளர் R. நுவீஸ் (மக்கி) மற்றும் கல்லூரியின் அனைத்து விரிவுரையாளர்களும் , மாணவிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வை சிறப்பிப்பதற்காக விசேட அதிதியாக அஷ்ஷெய்க் முஹம்மது அன்சார் தாஹா முஹம்மது (நளீமி), (பிரதேச செயலாளர் -அக்கரைப்பற்று , பதில் பிரதேச செயலாளர் – கல்முனை ) அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகளினால் அறபு மொழியின் சிறப்பை எடுத்துக்கூறும் முகமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் அறபு மொழியினாலேயே அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாகசபைத் தலைவர், விசேட அதிதி மற்றும் கல்லூரியின் பணிப்பாளர் ஆகியோரினால் சிறப்புரைகள் ஆற்றப்பட்டன. இச்சிறப்புரைகள் அறபு மொழியின் சிறப்புக்கள், அதன் பயன்கள் மற்றும் அதனை கற்பதன் முக்கியத்துவம் போன்ற பல பயனுள்ள கருத்துக்களை உள்ளடங்கியவையாக அமைந்தன.
மேலும் இப்போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் முதலாம் , இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பெறுமதியான பரிசில்களும் அதற்கடுத்த அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவிகளுக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.