பிரியாவிடை நிகழ்வு

தாருல் ஹுதா அறபு மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் மகளிர் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய Ash-sheikh AL. Mohamed Faizal (Sahwi, Madhani, B.A(Hons), M.A) அவர்கள் தனது மேற்படிப்பு மற்றும் தனிப்பட்ட தேவை காரணமாக கல்லூரியின் விரிவுரையாளர் சேவையிலிருந்து விலகிக் கொண்டதை முன்னிட்டு, அவர்களது சேவைகளைப் பாராட்டி கௌரவிக்குமுகமாக 16.01.2025 வியாழக்கிழமை கல்லூரியின் நிருவாக சபை, விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவிகளினால் பிரியாவிடை நிகழ்வு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் Dr. ARM. Haris அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் Dr. ML. Mubarak (madhani), செயலாளர் M. Bahrudeen ஆசிரியர், உதவி பணிப்பாளர் R. Nuwees (Makki) மற்றும் அனைத்து விரிவுரையாளர்கள், மாணவிகளும் கலந்து கொண்டார்கள்.

2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது கல்லூரியில் Ash-sheikh AL. Mohamed Faizal (மதனி) அவர்கள் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரை சுமார் 16 வருடங்கள் விரிவுரையாளராக சேவையாற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய கல்லூரியின் கௌரவ தலைவர், பணிப்பாளர், செயலாளர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் இவர்களது இவ் அளப்பெரிய பணியை பாராட்டியதோடு நிர்வாகம் சார்பாகவும் விரிவுரையாளர்கள் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் சார்பாகவும் மாணவிகள் சார்பாகவும் நினைவுச் சின்னம் மற்றும் நினைவு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இவர்களது இம்மை மற்றும் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.