பெற்றோர் கூட்டம் -2025

தாருல் ஹுதா அறபு மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் மகளிர் கல்லூரியில் ஜனவரி 18,19 சனி மற்றும் ஞாயிறு தினங்களில 2025 ஆம் ஆண்டின் முதலாவது பெற்றோர் கூட்டம் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணி தொடக்கம் 11.30 மணி வரை சிறப்பாக இடம்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் Dr. ARM. Haris அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி Dr. ML. Mubarak (madhani), செயலாளர் M. Bahrudeen ஆசிரியர், உதவி பணிப்பாளர் R. Nuvees (Makki) மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர் .

இக்கூட்டத்தில் கல்லூரியின் முதலாம் , இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் தர மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர். இதில் கல்லூரியின் சட்ட திட்டங்கள் நினைவுபடுத்தப்பட்டதோடு, குழந்தை வளர்ப்பு பற்றிய அடிப்படை அம்சங்களும் நினைவுபடுத்தப்பட்டன.

இறுதியாக 11.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை மாணவிகள் பெற்றோரை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது .

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.