Special Motivational Program -2024 December

2024 டிசம்பர் 19ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மாணவிகளுக்கான Special Motivational Program ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.30 தொடக்கம் 10.30 வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் , உதவிப்பணிப்பாளர் மற்றும் அனைத்து விரிவுரையாளர்களும் கடலந்து சிறப்பித்தனர்.

அத்தினத்தில் கல்லூரிக்கு விஷேட வருகை தந்திருந்த Dr. Alavi Sheriffdeen நளீமி (School for Pioneers DASSP) அவர்களும் சிறப்பு வளவாளராக கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் Dr. ML. Mubarak Madhani அவர்களின் அறிமுக உரையைத் தொடர்ந்து Dr. Alavi Sheriffdeen நளீமி அவர்கள் மாணவிகளுக்கான Motivational Speech ஒன்றை வழங்கினார். இதன்போது கல்வியை தேடும் பயணத்தில் தான் எதிர்கொண்ட சவால்களையும் அவற்றை வெற்றிகொள்ள கையாண்ட யுக்திகளையும் அடிப்படையாகக் கொண்டு தனது வாழ்வின் சுய அனுபவங்களை பகிர்ந்துகொண்டதோடு , ஒரு முன்மாதிரி முஸ்லிம் சமூகத்தை கட்டமைப்பதில் மார்க்கக்கல்விகற்ற பெண்களின் வகிபாகம் என்ன என்பது பற்றியும் இரத்தினச்சுருக்கமாக அமைந்திருந்த இவர்களது உரை மாணவிகளின் கல்வித்தேடலை தூண்டும் வகையில் அமையப் பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.