பரீட்சைப் பெறுபேறுகள்

Concept of exams and tests, close up

தாறுல் ஹுதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் 2024/25 கல்வியாண்டுக்காக புதிய மாணவிகளை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த 01.06.2024 சனிக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது. அதன் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சையில் தோற்றி குறிப்பிட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவிகளுக்கான நேர்முகப் பரீட்சை விரைவில் இடம்பெறும். அதற்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சைப் பெறுபேறுகளை www.dhlcm.lk எனும் கல்லூரியின் வலைத்தளத்திற்குக் சென்று பரீட்சாத்திகளது சுட்டிலக்கம் மற்றும் தே.அ.அ இலக்கம் என்பவற்றை உள்ளீடு செய்து பார்வையிடலாம். […]

தாறுல் ஹுதாவில் 73வது சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை ஒட்டி 04-02-2021 அன்று தாறுல் ஹுதாவில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர், கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி அவர்கள் மாணவிகளுக்கு நாட்டுப் பற்று, மற்றும் சகவாழ்வு போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.அத்தோடு, இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பு எனும் தொணியில் ஒரு காணொளியும் காண்பிக்கப்பட்டது, கோவிட் 19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்நிகழ்வு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.